நடிகர் ரஜினிகாந்தை தலைவா என அழைத்த மலேஷிய பிரதமர்!

Report Print Ajith Ajith in அறிக்கை

மலேஷிய பிரதமர் மொஹட் நஜிப் டுன் ரஷாக், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தலைவா என அழைத்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'மலேஷியாவில் இன்று மீண்டும் தலைவர் ரஜினிகாந்தை சந்தித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. உங்கள் நேரத்தை உங்கள் சந்தோஷத்தை இங்கே அனுபவியுங்கள்' என்று மலேஷிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ரஜினியை சந்தித்த புகைப்படத்துடன் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

மலேஷியாவை அடிப்படையாகக் கொண்டு ரஜினிகாந்தின் கபாலி படம் எடுக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மலேஷிய பிரதமரின் இந்த டுவிட்டை ரஜினி ரசிகர்கள் ரீடுவீட் செய்வதுடன், கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.