இலங்கை மதுபான நிலையங்களில் பெண்கள்! விநியோக நேரங்களில் திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் மதுபான நிலையங்களில், மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டிருந்தது.

புதிய நடைமுறை தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யும் கால எல்லை தொடர்பில் மேலுமொரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரை காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்த மதுபான விற்பனை நிலையங்கள், புதிய திருத்தத்திற்கு அமைய காலை 11 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்று இன்றைய தினம் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.