முதன்முறையாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபாரதம்!

Report Print Vethu Vethu in அறிக்கை

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றத்தினால் 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது மேற்கொண்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்தை வெளியேற்றும் சைலன்ஸர் பொருத்தியிருந்தமை, சத்தமாக இசை கருவியை பொருத்தியமை, காப்புறுதி இல்லாமை, பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராத தொகையை விதிப்பதற்கு மேலதிக நீதவான் லலித் கன்னங்கர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றம் விதித்த அதி கூடிய அபராத தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.