கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல்!

Report Print Murali Murali in அறிக்கை

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகளினால் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் மட்ட உத்தரவுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளை தொடர்ந்து சம்பவம் குறித்து தூதரகத்தின் பாதுகாப்பு கெமராவின் பதிவுகளை பொலிஸார் கோரிய போதிலும், தூதரக அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.