கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான பொருள்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருள் தொகை ஒன்று நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருளை கொண்டு வந்த இந்திய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் தமிழ்நாட்டில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

குறித்த நபர் 220 கிராம் நிறையுடனான மெதெம்பட்டமையின் எனப்படும் விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் தொகையை மறைத்து கொண்டு வந்துள்ளார். அதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 60 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரதான இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு வரும் இளைஞர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.