சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய இளவரசர்

Report Print Steephen Steephen in அறிக்கை

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பிரித்தானிய மகாராணியின் இளைய புதல்வர் இளவரசர் எட்வர்ட் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் பிரதிநிதியாக இளவரசர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இளவரசர் எட்வர்ட் நாட்டுக்கு வரவிருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வரும் இளவரசர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் இளவரசர் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.