ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மோசடிகள்: அடுத்தவாரம் ஆணைக்குழுக்கள்

Report Print Ajith Ajith in அறிக்கை

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய அடுத்த வாரம் ஆணைக்குழுக்களை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு மோசடிகள் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டால் மேலும் சில மோசடி அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படும் என சற்று முன்னர் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.