ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

ஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் இன்று ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர்.

எனினும், திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர்,

ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஒருநாள் சேவைக்காக விண்ணப்பித்தவர்களது அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.