மாவட்ட செயலகத்தில் 5 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றும் 44 உத்தியோகத்தர்கள்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

வவுனியா மாவட்ட செயலகத்தில் 44 உத்தியோகத்தர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றுவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், தகவல் அலுவலருமாகிய தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட தகவல் ஒன்றுக்கு பதில் அனுப்பிய கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்கள், பல்வேறு பிரிவுகள் என்பவற்றில் பல்வேறு தர நிலைகளில் கடந்த 5 வருட காலத்திற்கு மேலாக இடமாற்றம் எதுவும் வழங்கப்படாத நிலையில் 44 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இதேவேளை, வேறு சில உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் என உள்ளக இடமாற்றங்களைப் பெற்று குறித்த ஒரே திணைக்களத்தின் கீழ் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரியவருகிறது.

குறிப்பிட்ட மாவட்டத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் குறித்த கால எல்லையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற சுற்று நிரூபங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

இருந்த போதும் வவுனியா மாவட்டத்தில் இவை ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை பலர் மத்தியில் இவ் உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான நீடிப்பு ஏறபடுத்தியுள்ளது.