தனியார் வைத்தியசாலைகள் கட்டுப்பாட்டுச் சபை பெப்ரவரி முதல்

Report Print Steephen Steephen in அறிக்கை

தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்தும் தனியார் வைத்தியசாலை கட்டுப்பாட்டுச் சபை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் செயற்பட ஆரம்பிக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நிறுவனம் ஒன்றினால், நாடு முழுவதும் உள்ள சகல தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் குறித்து விபரங்களை திரட்டி அறிக்கை தயாரிக்க உள்ளது.

அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தனியார் வைத்தியசாலைகள் கட்டுப்பாட்டுச் சபை செயற்பட ஆரம்பிக்கும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.