எத்தகைய சூழலிலும் எம்மால் இலங்கையராக தலை நிமிர்ந்து நிற்க முடியும்

Report Print Jeslin Jeslin in அறிக்கை

சுதந்திரத்தின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிமைத்தனத்தினால் ஏற்படுத்தப்படும் அவமானத்தின் ஆதங்கத்தை புரிந்திருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், சுதந்திர தினம் தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் எமது கௌரவத்தினைச் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.