குடித்து விட்டு பெற்ற மகளை கொடுமைப்படுத்திய தந்தைக்கு கிடைத்த தண்டனை

Report Print Mubarak in அறிக்கை

திருகோணமலை - உப்புவெளி, பகுதியில் தனது மகளை தாக்கி காயப்படுத்திய தந்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பத்தாயிரம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தாத பட்டசத்தில் பத்து மாத சிறைதண்டனையும், இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் தண்டப்பணமும் அத்தொகையை செலுத்தாத பட்சத்தில் மூன்று மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் ஏ.பிரேம சங்கர் நேற்று பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை, உப்புவெளி, விஜித்தபுர, பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று தனது பதினைந்து வயதுடைய மகளை தாக்கி காயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.