விஷ்வரூபம் எடுத்துள்ள உதயங்க வீரதுங்கவின் கைது! உக்ரைன் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in அறிக்கை

துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தமது நாட்டுப் பிரஜை என்பதால், அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் கோரியுள்ளது.

உக்ரைன் அதிகாரிகள் அபுதாபி அதிகாரிகளிடம் விடுத்துள்ள இந்த கோரிக்கை காரணமா உதயங்க வீரதுங்க சம்பந்தமான பிரச்சினை ராஜதந்திர பிரச்சினையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் நீல அறிக்கை பிடியாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம், அவர் வசித்து வரும் பிரதேசம், செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் காரணமாகவே தமது நாட்டுப் பிரஜையான உதயங்க வீரதுங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் கோரியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இருக்கும் நெருக்கமான உறவுகள் காரணமாக குறித்த கோரிக்கையை புறந்தள்ளவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்து இலங்கைக்கு அழைத்து வர இலங்கை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் அபுதாபி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

மேலும் உதயங்க வீரதுங்க, ரஷ்ய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், ரஷ்யாவும் இந்த விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

உக்ரைன் போராளிகளுக்கு ரஷ்யா ஆயுதங்கள் விநியோகித்த விடயத்திலும் சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.