11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Steephen Steephen in அறிக்கை

கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கடற்படை அதிகாரிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி வெளிநாடு செல்ல தடைவிதித்தும் நீதவான் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தை நீக்குமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் விடுத்துள்ள கோரிக்கை குறித்த முடிவு எதிர்வரும் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.