கொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம்! உரிமையாளர் உட்பட 7 பேர் பலி

Report Print Vethu Vethu in அறிக்கை

இரண்டாம் இணைப்பு

கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

adams group of company என்ற கட்டடத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்த அனர்த்தத்தில் பலர் சிக்கியுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த பகுதி பெருமளவு அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.