பெண்ணாக மாறிய நள்ளிரவில் அச்சுறுத்தும் மர்மநபர்

Report Print Vethu Vethu in அறிக்கை
426Shares

புத்தளத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்து அச்சுறுத்தும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக புத்தளம், ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் மக்களுக்கு தொல்லையாக இருந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்திருக்கும் குறித்த நபர் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறார்.

இதனால் அந்தப் பகுதி மக்கள் இந்த நபரை பிடிப்பதற்காக சில காலங்களாக இரவு நேரத்தில் அவதானத்துடன் இருந்துள்ளனர்.

அதற்கமைய பெண்களின் உள்ளாடைகளை அணிந்த நிலையில் வீடொன்றுக்குள் குறித்த நபர் நுழையும் போது பிரதேச மக்கள் அவரை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

19 வயதான இளைஞன் அதிக குடி போதையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுழைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.