திண்டாட்டத்தில் கொழும்பு அரசியல்! 500 மில்லியனுக்கு சொகுசு வீடு வாங்கும் அமைச்சர்

Report Print Vethu Vethu in அறிக்கை
1217Shares

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் 500 மில்லியன் பெறுமதியான சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ப்ளு சிப் நிறுவனத்தினால் சொகுசு வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரினால் தற்போது வரையிலும் அந்த வீடு கொள்வனவு செய்வதற்காக கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நிறுவனத்தினால் அது வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர் கடந்த 3 வருடங்களில் பாரிய முன்னேற்றம் கண்ட ஒருவராகும் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் இருந்து தனது போக்குவரத்திற்காக ஹொண்டா மோட்டார் சைக்கிள் ஒன்றையே பயன்படுத்தியுள்ளார். அத்துடன் இந்த அமைச்சர் கடந்த தேர்தலில் தனது தொகுதியில் பாரிய தோல்வியடைந்த ஒருவராகும்.

நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய சூழ்நிலைக்கமைய இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனவும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான முழுமையான தகவல் வெளியாகும் எனவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.