கிளைபோசேட் உரவகைகளை தடை செய்துள்ள தீர்மானத்தை தளர்த்திக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
சிறுநீரகப் பாதிப்புக்கு காரணியாக அமைந்துள்ளது என கண்டறியப்பட்டதால் கிளைபோசேட் உர வகைகளை 2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் இலங்கை தடை விதித்திருந்தது.
எனினும் தேயிலைச் செடிகளுக்கு கிளைபோசேட் உரம் இன்றி போதுமான உற்பத்தியை பெற்றுக் கொள்ள முடியாமலிருப்பதாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டு அரசாங்கத்தின் வருமானமும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு கிளைபோசேட் உரவகைகளுக்கான தடையைத் தளர்த்தி அவற்றை தேயிலைச் செடிகளுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.