இலங்கை தமது கடப்பாடுகளை மதிக்க வேண்டும்! ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Ajith Ajith in அறிக்கை
107Shares

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம் மற்றும் நிலைமாற்று கால நீதி என்பன தொடர்பான தமது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பணிமனை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்கள் சரியாக தெரியாததால் பல இலங்கையர்கள் தேசிய நல்லிணக்கத்தில் பங்கு கொள்ள முடியாதிருக்கும்.

இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டை மதித்தல் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் நேற்றுடன் ஓராண்டை எட்டியது.

இந்த நிலையில், காணாமல்ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தமது கடப்பாடுகளை மதித்துச் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.