நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த முன்னாள் பொலிஸ் மா அதிபர்

Report Print Kamel Kamel in அறிக்கை

தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்தார் என ஜயந்த விக்ரமரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி ஜயந்த விக்ரமரட்ன உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இந்த மனுவிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.