பொருட்களின் விலைகளை உயர்த்தும் உத்தேசம் கிடையாது

Report Print Kamel Kamel in அறிக்கை

பொருட்களின் விலைகளை உயர்த்தும் உத்தேசம் கிடையாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துமாறு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கும் போதிலும், விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே விலை அதிகரிப்பிற்கு அனுமதியளிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வருடத்தில் சில தடவைகள் இவ்வாறு விலை ஏற்றம் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும்.

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்படும் பொழுது அது குறித்து விரிவாக ஆராய்ந்து, இந்த விடயம் தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவிடம் சமர்ப்பித்து அதன் பின்னர் அது குறித்து அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படும்.

அதன் பின்னரே விலை உயர்வு குறித்து தீர்மானம் எடுக்கப்படும். எரிவாயு விலையை உயர்த்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஹசித திலகரட்ன குறிப்பிட்டுள்ளார்.