பிரித்தானிய நாட்டவரால் இலங்கை கோடீஸ்வர வர்த்தகருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Vethu Vethu in அறிக்கை

அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் அவரது உதவியாளர்கள் மூவர் தம்புள்ளை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத்திற்கு அடியில் காணப்படும் மிக பழைமையான இடி தாங்கி ஒன்றை பெற்றுக் கொடுத்தால் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பிரித்தானிய நாட்டவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தும்பர பிரதேச காட்டுக்குள் உள்ள காணியில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட போது நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து நீண்ட தூரம் சென்று இந்த கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அதிக பலமான வெடி பொருட்கள், அகழ்வு பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Latest Offers