11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்! கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Report Print Shalini in அறிக்கை

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பிரதிவாதியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில், கடற்படை முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து நீக்குமாறு பிரதிவாதியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளை வேறு பிரிவுக்கு மாற்றுவதற்கான உத்தரவை வழங்க நீதிமன்றத்திற்கு சட்டத்தின் பிரகாரம் இடமில்லை என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்,குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படடையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.