குமார வெல்கமவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்கின்றது! சட்டமா அதிபர்

Report Print Aasim in அறிக்கை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிரான பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான குமார வெல்கம, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தரமற்ற உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பொன்றை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

எனினும் குறித்த விவகாரம் தொடர்பில் தன்னைக் கைது செய்வதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி குமார வெல்கம, உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது குமார வெல்கம தொடர்பான மோசடி விவகாரம் குறித்து பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே வழக்கு தொடர்பான இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் சட்டமா அதிபர் வாதிட்டுள்ளார்.

இதனையடுத்து மனு மீதான மேலதிக விசாரணைகள் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.