ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய பிடியாணை

Report Print Aasim in அறிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை கைது செய்யுமாறு சிலாபம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் , அவற்றுக்கான ரவைகள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சாந்த சிசிர குமார அபேசேகரவுடன் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் சாந்த சிசிர குமார தவிர்ந்த ஏனைய சந்தேக நபர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டு அபராதப் பணம் செலுத்தி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுவிட்டனர்.

எனினும், சிசிரகுமார அபேசேகர தான் நிரபராதி என்று தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர திகதி குறிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு சிலாபம் நீதவான் நீதிமன்ற நீதிபதி மொராயஸ் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.