நாமல் ராஜபக்‌ஷ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Report Print Aasim in அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

என். ஆர். கன்சல்டேசன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு காரணமாக நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

எனினும் நேபாளம் மற்றும் ரஷ்ய நாடுகளில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடுகளில் கலந்து கொள்ள அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் நாமல் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவருடைய சட்டத்தரணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்ட கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி சாந்தனி டயஸ், பெப்ரவரி 26 தொடக்கம் ஏப்ரல் 26 வரை வெளிநாடு செல்வதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு தற்காலிக அனுமதி அளித்துள்ளார்.