நீர்ப்பாசன அமைச்சின் கணக்காளர், கணக்காய்வாளருக்கு விளக்கமறியல்

Report Print Aasim in அறிக்கை

நீர்ப்பாசன அமைச்சின் பிரதம கணக்காளர் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் சாந்தனி டயஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள போலி ஆவணங்களை தயார் செய்து சுமார் 12 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான பொலிசாரின் தகவல் அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி சாந்தனி டயஸ் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீர்ப்பாசன அமைச்சின் பிரதம கணக்காளர் சரத் அசோக அத்தநாயக்க மற்றும் உள்ளக கணக்காளர் சந்தன ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 28ம் திகதி வரை அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers