இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையர்களின் தலா கடன்சுமை 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் இறுதியில் 373,462 ரூபாவாக காணப்பட்ட இந்த தொகையானது, ஒரே ஆண்டில் 12 வீத அதிகரிப்பாக 44,451 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டில் இலங்கையர்களின் தலா கடன்சுமை 108,908 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
எனினும், இந்த தொகை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.