கொழும்பு வரவிருந்த விமானம் திடீரென இரத்து!

Report Print Murali Murali in அறிக்கை
343Shares

மதுரையிலிருந்து கொழும்பு வரவிருந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.40 மணியளவில் 130க்கு மேற்பட்ட பயணிகளுடன் மதுரை விமானநிலையத்தில் இருந்து கொழும்பு வரவிருந்த விமானமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணியான போதிலும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்படவில்லை.

இதனால் விமானம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என விமானநிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்ததுடன், டுபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவிருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.