கச்சதீவு திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Report Print Aasim in அறிக்கை
95Shares

கச்சதீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் திருவிழாவில் இம்முறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் இலங்கை - இந்திய பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

விடுதலைப்புலிகளுடனான யுத்த காலப்பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட கச்சதீவு அந்தோனியார் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக நடைபெற்ற இந்த ஆண்டுக்கான, திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், முப்படைகளின் தலைமை அலுவலர் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஆகியோரும் வழிபாடுகளில் கலந்து கொண்டதாக கடற்படைத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.