வித்தியா கொலையில் சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கு விசாரணை முடிவு! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Sumi in அறிக்கை
2425Shares

வித்தியா படுகொலை வழக்கில் தொடர்புடைய சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவுறுத்தி விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.

குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இதனையடுத்து குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற மன்றானது அவ் நிபந்தனையை தளர்த்தி இனிமேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இட தேவையில்லை என பணிப்புரை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஒத்திவைத்து நீதிவான் றியால் உத்தரவிட்டார்.