பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்பில் பிரித்தானியா தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in அறிக்கை
2338Shares

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தின் போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கடந்த மாதம் இலங்கைக்கு மீளவும் திருப்பி அழைக்கப்பட்டார்.

எனினும், அவரது மனைவி, பிள்ளைகள் லண்டனில் தங்கியுள்ள நிலையில், அவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று, கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்திடம் கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பிரித்தானிய தூதரகம் வழங்கியுள்ள பதிலில், “லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

இலங்கை அரசின் இந்த விசாரணை முடியும் வரையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியா கருத்து வெளியிடுவதற்கோ, அல்லது மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதோ பொருத்தமானது அல்லவென” தெரிவித்துள்ளது.