ரமித் ரம்புக்வெல்ல வெளியில் வந்தார்

Report Print Steephen Steephen in அறிக்கை

நாவல - நாராஹென்பிட்டி லேக் விக் ட்ரைவ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள்வி இருவரை விபத்துக்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 10,000 ரூபா பொலிஸ் பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் நாராஹென்பிட்டி பொலிஸாரால் ரமித் ரம்புக்வெல்ல நேற்று கைது செய்யப்பட்டு இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ரமித் ரம்புக்வெல்லவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரமித் ரம்புக்வெல்ல பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு தனது கைத்துப்பாக்கியால் தலையில் தாக்கியதால் அவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.