30 ஆண்டுகளில் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் என்ன செய்தார்கள்? பிரித்தானியாவில் அறிக்கை

Report Print Steephen Steephen in அறிக்கை

விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை உட்பட உலகம் முழுவதும் செயற்பட்ட விதம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை இங்கிலாந்து உலக இலங்கை பேரவை, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வூட்டின் அவர்களிடம் இன்று கையளித்துள்ளது.

லண்டனில் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து இந்த அறிக்கையை குறித்த அமைப்பினர் கையளித்துள்ளனர்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அறிக்கையல் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உலக இலங்கை பேரவை கூறியுள்ளது.

இங்கிலாந்தின் உலக இலங்கை பேரவையின் இணைத் தலைவர் இந்திக குணசேகர, செயலாளர் மெனிக் மாலியத்த, குழு உறுப்பினர் மெண்டிஸ் ஆகியோர் இந்த அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.