இலங்கையில் குறைவடைந்துள்ள இளவயது திருமணங்கள்

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையில் இளவயது திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இளவயது திருமணங்கள் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட 7 நாடுகளில் இளவயது திருமணங்கள் குறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக கடந்த 10 வருடக்காலப்பகுதியினுள் இளவயது திருமணங்கள் 15 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு 16 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரையிலான 18 வயதைக் கொண்ட இளைஞர், யுவதிகள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.