காணாமல் போனோர் அலுவலகம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா பிரதானி

Report Print Gokulan Gokulan in அறிக்கை

காணாமல் போனோர் அலுவலகம் விரைவாக சுயாதீனமாக இயங்கும் என்று எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகார பிரதானி ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் விஜயமாக இலங்கை வந்த அவர் இன்றுடன் தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளார்.

அவர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், சிவில் சமூக மற்றும் பொதுக்குழுக்களின் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தார்.

அவரது விஜயம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு புதிதாக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை, நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாகவும், விரைவில் இந்த குழு, காணாமல் போனோரது உறவினர்களது நீண்டகால கேள்விகளுக்கு பதில் வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார்.

மேலும் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் அமுலாக்கப்படாதிருக்கின்றமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் உறுதிமொழிகள் உரிய வகையில் நேரசூசியுடன் அமுலாக்கப்பட வேண்டும்.

அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டிப்பதுடன், இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிக்கவும் ஆவண செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.