வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 1,532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

Report Print Ajith Ajith in அறிக்கை

2018 ஆம் ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் புறக்கணிப்பு முதலான சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கட்டாயக் கல்வி வழங்கப்படாமை தொடர்பில் 241 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.