விரைவில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்

Report Print Murali Murali in அறிக்கை

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது சுற்றுலாதுறை, ஐடி உள்ளிட் பல தொழிற்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை பல தொழிற்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் பொருளாதாரத்தில் பல இழப்புகள் ஏற்படக்கூடும். சுற்றுலாதுறை, ஐடி உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகையினால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை நீண்டகாலம் தடைசெய்து வைக்க முடியாது. பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சமூக ஊடகங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன், சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுக்கத்தக்க, வன்முறைகளை தூண்டும் வகையிலாக கருத்து பறிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான அமைப்பை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.