கோலி - அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

Report Print Murali Murali in அறிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஆகியோர் இலங்கைக்கு வர வேண்டும் என விளையாட்டுதுறை அமைச்சர் தயா சிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.

sportswallah ஊடகத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் முத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் கோலி, தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஆகியோர் இலங்கைக்கு வர வேண்டும் அமைச்சர் தயா சிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.

“விராட் கோலியை விளையாடுவதற்காக இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் தனது மனைவியுடன் எங்கள் நாட்டில் சில நாட்களை செலவழிக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை.

இப்போது எங்கள் நாட்டிற்கு விருந்தினராக அவர் வரவேண்டும். எங்கள் நாட்டில் பார்ப்பதற்கு நல்ல சுற்றுலா தளங்கள் இருக்கின்றன” என அமைச்சர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.