பிரித்தானியாவுக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Report Print Ajith Ajith in அறிக்கை

பிரித்தானியாவுக்கான விசா கோரல் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு செல்லும் பயணிகளுக்காக புதிய இணைய விசா வசதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஏப்ரல் 5ஆம் திகதி முதல் இந்த விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.

டிமான்ட் மொபைல் விசா என்ற பெயரில் வழங்கப்படும் இந்த புதியமுறை விசாவை பெற விண்ணப்பத்தாரி ஒருவர், விசா விண்ணப்பத்திற்காக விஎப்எஸ் என்று கூறப்படும் நிலையத்திற்கு சென்று விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையில்லை.

மாறாக விசா விண்ணப்பங்கள் ஒருவரின் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கோ கொண்டு வரப்படும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Latest Offers