இலங்கையில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்! விரைவில் புதிய வரைபடம்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பாரிய நிர்மாணிப்புகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்படுகின்ற புவியியல் மாற்றங்களுடன் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வரைபடத்தை அச்சிடும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என நில அளவையாளர் பீ.என்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார்.