புத்தாண்டு தினத்தில் வயதான தாய் தந்தையை அடித்து காயப்படுத்திய நபர்

Report Print Mubarak in அறிக்கை

திருகோணமலை - சேருவில பகுதியில் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் சாராயம் குடித்து விட்டு வயதான தாய் தந்தையை அடித்து காயப்படுத்திய ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நபரை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சும்சுதீன் நேற்று உத்தரவிட்டார்.

சேருவில - சுமேதங்கபுர, தெவனபட்டு மகபுர, பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தினமான 14ஆம் திகதி மாலையில் ஒருவர் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று காணி மற்றும் வயல் நிலங்களை தனக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறி வயதான தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.