தந்தையின் விடுதலைக்காக குழந்தைகளின் கைகளால் வழங்கப்பட்ட மகஜர்

Report Print Shalini in அறிக்கை

ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மூன்று இலட்சம் கையொப்பங்கள் அடங்கிய படிவங்களும், ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்கான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் இன்று ஆனந்தசுதாகரனின் குழந்தைகளின் கைகளால் கையளிக்கப்பட்டன.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், வடக்கு மாகாண அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் மூன்று இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய வடமாகாண கல்வி அமைச்சர்,

“இக்குழந்தைகளின் தந்தையின் விடுதலைக்காக நாம் முழு முயற்சியுடன் பாடுபடுவோம். இங்கு ஒப்படைக்கப்பட்ட மூன்று இலட்சம் கையெழுத்துகளும் மிகவும் பெறுமதி வாய்ந்தவை.

இவை அனைத்தும் வடபுலத்து கல்விச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரியதொரு முயற்சி. இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்தமை பாராட்டுக்குரியது.” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் ந.அனந்தராஜ், மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சாந்தசீலனும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரும், வடக்கு மாகாணத்தின் 12 வலயக் கல்விப் பணிப்பாளர்களும், வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளும், வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச்சங்க உறுப்பினர்களும், பிராந்திய தலைவர், செயலாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.