வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பணிப்பெண்களை அனுப்பும் போது பணி செய்யும் இடம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல் பெறுகையில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல் மனரீதியான தன்மை தொடர்பிலும் தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பணிப்பெண்களை அனுப்பும் போது சேவை செய்யும் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டின் அளவு, உரிமையாளரின் தொழில் ஆகிய தகவல்களை பெற்றுக் கொள்ளப்படுது. எனினும் உடல் மற்றும் மன நிலைமை தொடர்பில் தகவல் பெற்றுகொள்வதில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சேவை செய்த வீட்டின் உறுப்பினரால் இலங்கை பணிப்பெண் சுட்டு கொல்லப்பட்டார். அவர் ஒரு மன நோயாளி என பின்னரே தெரியவந்தது. இவ்வாறான நிலைமைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers