பல உயிர்களை காவு கொண்ட காபுல் தாக்குதல்: இலங்கை கண்டனம்

Report Print Murali Murali in அறிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 63 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கண்டனத்தை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

"காபுலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் இன்றைய தினம் மேற்கொண்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை இலங்கை கடுமையாக கண்டிக்கிறது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers