வெளிநாட்டில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கைது: அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அறிக்கை

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தியிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த செவ்வாய் கிழமை 131 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி, சட்டவிரோதமான முறையில் கப்பல் ஒன்றில் பயணிக்க முற்பட்ட வேளை மலேசிய அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் 41 பேர் ஐக்கிய நாடுகளின் ஏதிலி பேரவையினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டுள்ளனர். அத்துடன் அவர்களுள் 4 பேர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், அந்த நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.