இலங்கையில் சிறுவர்கள், பெற்றோர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in அறிக்கை

சிறுவர் சேமிப்பு கணக்குகளில் வைக்கப்படும் பணத்திற்கு கிடைக்கும் வட்டிப்பணத்தில் 5 வீத வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு சிறுவர் கணக்குகளில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுவர் சேமிப்பு கணக்குகளில் இவ்வாறு வரி அறவிடுவதன் மூலம் மக்களின் வைப்புகளில் குறைவுகள் எற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய சிறுவர் சேமிப்பு கணக்குளில் அறவிடப்படும் 5 வரி விதிப்பை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்வதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.