பேஸ்புகில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயற்பாடு!

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் பேஸ்புக் ஊடாக தொடர்ந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பொலன்னறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் பல பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து நண்பர்களிடம் ஈசி கேஷ் ஊடாக பணம் பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முனமல்தெனிய - கம்புராபொல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.