சமுர்த்தி வங்கியில் 675 கோடி ரூபாவை கொள்ளையடித்தது யார்?

Report Print Rakesh in அறிக்கை

சமுர்த்தி வங்கியில் 675 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளமை படுபயங்கரமான குற்றச்சாட்டாகும் என முன்னாள் சமுர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சபைக்குப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி வங்கியில் 675 கோடி ரூபா மாயமாகியுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

675 கோடி அல்ல 0.75 சதவீத கோடி மோசடி இடம்பெற்றிருந்தால் கூட அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சமுர்த்தி அமைச்சராக நானே பதவி வகித்தேன். எனவே, பொறுப்பேற்பதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்'' என்றும் எஸ்.பி. கூறியுள்ளார்.