தொடர்கதையாகிப் போன ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Report Print Aasim in அறிக்கை

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி தொடர்கதையாகிப் போயிருப்பதை மத்திய வங்கியின் அறிக்கையொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே 11ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 3.2 வீதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அத்துடன் இந்திய ரூபாய், ஆஸ்திரேலிய டொலர் போன்ற சர்வதேச நாணயச் சந்தையின் முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியுற்றுள்ளது.

அதே நேரம் தற்போதைய நிலையில் அமெரிக்க டொலர் ஸ்திரத்தன்மையைப் பெற்றிருப்பதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது